நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திவால் மற்றும் திவால் நிலை திருத்தச் சட்டம் 2026 குறித்த பயிலரங்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 8:13PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை , 'திவால் மற்றும் திவால் நிலை திருத்தச் சட்டம், 2026' குறித்த பயிலரங்கைப் புதுதில்லியில் இன்று (19.05.2026) நடத்தியது. நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் திரு எம் நாகராஜு தலைமையில் நடைபெற்ற பயிலரங்கில், நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், இந்திய திவால் மற்றும் திவால் நிலை வாரியம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

இப்பயிலரங்கில், 2025 டிசம்பர் வரை இச்சட்டத்தின்கீழ் 8,800-க்கும் மேற்பட்ட நிறுவன திவால் தீர்வு நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டு, கடன் கொடுத்தவர்கள் ரூ.4.11 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் பேசிய நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் திரு எம் நாகராஜு, குழுமத் திவால்நிலை மற்றும் எல்லை கடந்த திவால்நிலை தொடர்பான புதிய திருத்தங்கள், காலதாமதத்தைத் தவிர்த்து திவால் தீர்வு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றார். ஐபிபிஐ தலைவர் திரு ரவி மிட்டல், இத்திருத்தங்கள் வெளிப்படைத்தன்மையையும், பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பையும் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டார். இறுதியாகப் பேசிய நிதிச் சேவைகள் துறை சிறப்புச் செயலாளர் திரு சஞ்சய் லோஹியா, நாட்டில் தொழில் செய்வதை எளிதாக்க இச்சட்டம் பெரிதும் உதவுவதாகக் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262995&reg=3&lang=1

 

 

SS/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2263213) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी