PIB Backgrounder
இந்தியாவில் பரிணாம வளர்ச்சியடைந்து வரும் அளவியல் முறை மூலம் வர்த்தகம், வெளிப்படைத்தன்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்துதல்
இடுகை இடப்பட்ட நாள்:
20 MAY 2026 12:12PM by PIB Chennai
இந்தியாவில் பரிணாம வளர்ச்சியடைந்து வரும் அளவியல் முறை நியாயமான வர்த்தகம், நுகர்வோர் பாதுகாப்பு, தொழில் முறை தரம், உலகளாவிய போட்டித் திறன் ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.
அளவியல்: அளவீட்டு அளவியல் மூலம் வர்த்தகத்தில் நம்பிக்கையை உருவாக்குதல்.
நவீன பொருளாதார அமைப்புகள், தொழில்முறை உற்பத்தி, அறிவியல் முன்னேற்றம், நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அளவீடு அடித்தளமாகத் திகழ்கிறது. தரப்படுத்தப்பட்ட அளவீடுகள் வர்த்தகம், சுகாதாரம், உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, எரிசக்தி விநியோகம், மின்னணு தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் உறுதி செய்கிறது.
உலக அளவியல் தினம்: ஆண்டுதோறும் மே 20 அன்று கடைபிடிக்கப்படும் உலக அளவியல் தினம், நவீன சமூகத்தில் அளவீட்டு அறிவியலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்த நாள் 1999-ம் ஆண்டு எடைகள் மற்றும் அளவைகளுக்கான சர்வதேசக் குழுவால் அறிவிக்கப்பட்டது. 1875 மே 20 அன்று மீட்டர் உடன்படிக்கை கையெழுத்தானதை இந்த நாள் குறிக்கிறது.
இந்த உடன்படிக்கை உலக அளவில் சீரான மற்றும் தொடர்ந்து உருவாகும் மெட்ரிக் அளவீட்டு முறைக்கான நிறுவனம் மற்றும் அறிவியல் அடித்தளத்தை அமைத்தது.
அன்றாட வாழ்வில் அளவியல்: துல்லியம், நம்பிக்கை மற்றும் நியாயத் தன்மையை உறுதி செய்தல். பெட்ரோல் நிலையங்கள், மளிகைக் கடைகள், நகைக் கடைகள், மருத்துவமனைகள், மின்சார மீட்டர்கள், குடிநீர் விநியோக அமைப்புகள், பெட்டிகளில் அடைக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான எடையிடும் மற்றும் அளவிடும் கருவிகளை சட்ட அளவியல் அமைப்புகள் ஒழுங்குபடுத்துகின்றன.
எடைகள் மற்றும் அளவைகள் தரச்சட்டம், 1956, 1976: இந்தியாவில் ஒரு சீரான, அறிவியல்பூர்வமான மற்றும் தரப்படுத்தப்பட்ட அளவீட்டு முறையை நிறுவுவதற்காக 1956-ம் ஆண்டில் எடைகள் மற்றும் அளவைகள் தரச்சட்டம் இயற்றப்பட்டது. இது மெட்ரிக் முறை மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவீட்டுத் தரங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.
இச்சட்டம் 1976-ம் ஆண்டு திருத்தப்பட்டது. அதன்படி இந்திய எண்களின் சர்வதேச வடிவத்திற்கேற்ப தரப்படுத்தப்பட்ட எண் முறையை அறிமுகப்படுத்துதல்; எடைகள், அளவுகள் மற்றும் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பொருட்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துதல்; எடையிடும் மற்றும் அளவிடும் கருவிகளுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் தரப்படுத்துதல்; எடைகள் மற்றும் அளவைகளில் சட்டமீறல்களுக்கான அபராதங்கள் மற்றும் தண்டனைகள் ஆகியவை இதில் அடங்கும்.
சட்ட அளவியல் சட்டம் 2009-ன் முக்கிய அம்சங்கள்:
இந்தியா முழுவதும் மெட்ரிக் முறை மற்றும் தரப்படுத்தப்பட்ட அளவீட்டு அலகுகளை கட்டாயமாக ஏற்றுக் கொள்ளுதல்.
வர்த்தகப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படும் எடையிடும் மற்றும் அளவிடும் கருவிகளை ஒழுங்குப்படுத்துதல்.
முன்பே அடைக்கப்பட்ட பொருட்களுக்கு அளவு, எடை, அளவீடு போன்ற விவரங்கள் அடங்கிய கட்டாய அறிவிப்புகளை பரிந்துரைத்தல்.
எடையிடும் கருவிகளின் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், பழுது பார்ப்போர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு பதிவை வழங்குதல்.
சட்ட அளவியல் அதிகாரிகளுக்கு ஆய்வுகள், சோதனை செய்தல், பறிமுதல் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளித்தல்.
தரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத எடைகள் மற்றும் அளவுகளை பயன்படுத்துவதற்கு அபராதம் விதித்தல் ஆகியவை இதில் அடங்கும்
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263113®=3&lang=1
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263162)
வருகையாளர் எண்ணிக்கை : 7