ஜவுளித்துறை அமைச்சகம்
“புதிய யுக இழைகள் – புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் எதிர்காலம்” என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார், மத்திய அமைச்சர் திரு. கிரிராஜ் சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 9:10PM by PIB Chennai
“புதிய யுக இழை: புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் எதிர்காலம்” என்ற தலைப்பிலான தேசிய கருத்தரங்கை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். தேசிய சணல் வாரியத்தின் மூலம் ஜவுளி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கருத்தரங்கில், இந்தியாவின் ஜவுளித் துறைக்கு வளர்ந்து வரும் நிலையான இழைகளின் மாற்றியமைக்கும் ஆற்றல் குறித்து விவாதிப்பதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், புதுமையாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்தனர். இந்த நிகழ்ச்சியில், ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா, அமைச்சகத்தின் செயலாளர் திருமதி நீலம் ஷமி ராவ் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் திரு கிரிராஜ் சிங், நிலைத்தன்மையை ஊக்குவிப்பதிலும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் நவீன கால இழைகளின் முக்கியப் பங்கை வலியுறுத்தினார். மேலும், தொடர்ச்சியான ஈடுபாட்டை உறுதி செய்யவும், முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், நவீன கால இழைச் சூழலியலின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்டவர்களுடன் வழக்கமான மெய்நிகர் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த இழைகள், தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை அடைவதிலும், நீடித்த வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாடுகளுக்குப் பங்களிப்பதிலும் முக்கியப் பங்காற்றக்கூடும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இழைச் சூழலியலை வலுப்படுத்துவதில் புத்தாக்கம், திறன் மேம்பாடு மற்றும் அடித்தள தொழில்முனைவு ஆகியவற்றின் பங்கை திருமதி பபித்ரா மார்கெரிட்டா வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263024®=3&lang=1
(Release ID: 2263024)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263063)
வருகையாளர் எண்ணிக்கை : 9