குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் வர்த்தகம் மூலம் இந்தியாவின் சிறு வணிகர்களுக்குப் புத்துயிர்

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 7:05PM by PIB Chennai

இந்தியாவில் உள்ள  குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் ‘டீம்’  என்ற புதிய திட்டத்தை அதிவேகமாகச் செயல்படுத்தி வருகிறது.

உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படும் 'ரேம்ப்'  திட்டத்தின் கீழ், ஒரு முக்கியப் பகுதியாக இந்த ‘டீம்’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தேசிய சிறுதொழில் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம், குறு மற்றும் சிறு நிறுவனங்கள் இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தில் தடம் பதிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் தொடக்கம் முதல் இறுதி வரை வழங்குகிறது.

மத்திய அரசின் ‘டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த கட்டமைப்பின்  மூலம், இந்தச் சிறு வணிகர்கள் தங்களது தயாரிப்புகளை ஆன்லைனில் எளிதாக விற்க வழிவகை செய்யப்படுகிறது. பாரம்பரிய கைவினைஞர்கள், வீட்டில் இருந்தபடியே தொழில் செய்யும் பெண்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு சில்லறை வியாபாரிகள் இத்திட்டத்தின் மூலம் பெரும் பயனடைவார்கள்.

 சிறு வணிகர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் சந்திக்கும் சவால்களைப் போக்க, இந்தத் திட்டம்  முறையான ஆதரவை வழங்குகிறது.

இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சிறு வணிகர்கள், இடைத்தரகர்கள் இன்றி நாட்டின் எந்தப் பகுதிக்கும் தங்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து தற்சார்பு நிலையை அடைய முடியும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262948&reg=3&lang=1

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2263056) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी