சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பரிதாபாத்–சோஹ்னா விரைவுச்சாலை திட்டம்: மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 6:20PM by PIB Chennai

மத்திய தில்லி-என்சிஆர் பிராந்தியத்தின் இணைப்பை மேம்படுத்தவும், ஜேவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் மற்றும் தில்லி-மும்பை விரைவுச்சாலையை இணைக்கவும் ரூ.4,463 கோடி மதிப்பில் 59 கி.மீ நீளமுள்ள 'பரிதாபாத்-சோஹ்னா' நெடுஞ்சாலைத் திட்

டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி, தில்லி முதல்வர் திருமதி. ரேகா குப்தா மற்றும் பிற மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் இன்று ஆய்வு செய்தார்.

 

பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் இந்த 6 வழிச் சாலை, அதிநவீன பொறியியல் தொழில்நுட்பங்களுடன் கட்டப்படுகிறது. நிலநடுக்கத்தைத் தாங்கும் திறன் கொண்ட 140 மீட்டர் நீளமுள்ள 'நெட்வொர்க் ஆர்ச் பாலம்' மற்றும் ஓக்லா, காஜிப்பூர் குப்பைக் கிடங்குகளிலிருந்து பெறப்பட்ட 2 லட்சம் மெட்ரிக் டன் கழிவுப் பொருட்கள் சாலை கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

 

மேலும், இந்த நெடுஞ்சாலையை நொய்டா சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்க ரூ.2,360 கோடி மதிப்பில் 31.4 கி.மீ நீளமுள்ள பிரத்யேக விரைவுச்சாலைத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இது பயன்பாட்டிற்கு வரும்போது, தெற்கு தில்லி, ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் பகுதியினர் தில்லி போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் நேரடியாக நொய்டா விமான நிலையத்தை அடைய முடியும். இது இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262910&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2262910

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2263053) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी