சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
டெல்லி என்சிஆரில் விதிமீறல்களை ஆய்வு செய்த காற்றுத்தர மேலாண்மை ஆணைய பணிக்குழு
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 6:04PM by PIB Chennai
தேசிய தலைநகர் பிராந்தியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் 131-வது அமலாக்கப் பணிக்குழுக் கூட்டம் 18.05.2026 அன்று நடைபெற்றது. இதில், ஏப்ரல் 29 முதல் மே 10 வரையிலான 12 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இக்காலகட்டத்தில், ஆணையத்தின் பறக்கும் படைகளால் 125 சோதனைகள் நடத்தப்பட்டு, கட்டுமான இடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களில் மொத்தம் 39 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதன் அடிப்படையில், 7 நிறுவனங்களை மூடவும், 13 டீசல் ஜெனரேட்டர்களுக்கு சீல் வைக்கவும், 12 விளக்கம் கேட்கும் நோட்டீஸ்களை அனுப்பவும், 4 வழக்குகளில் சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், நொய்டா ஆணையம் மேற்கொண்ட சோதனைகளில் சாலைப் புழுதி தொடர்பான 28 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, தொடர் விதிமீறல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எரிபொருள் விவரங்கள் மற்றும் 'இயங்குவதற்கான ஒப்புதல்' நிபந்தனைகளை முறையாகச் சரிபார்க்குமாறு பணிக்குழு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 27,133 சோதனைகள் நடத்தப்பட்டு, 1,784 நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. காற்று மாசைக் குறைக்க, அனைத்துத் துறைகளும் சுற்றுச்சூழல் விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262896®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2262896
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2263010)
வருகையாளர் எண்ணிக்கை : 10