அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

குறுகிய கால விண்மீன் சார்ந்த பைனரி அமைப்புகளில் ஒன்றை இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2026 3:49PM by PIB Chennai

விண்மீன்கள் எனப்படும் நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பற்றிய வானியலாளர்களின் புரிதலை மறுவடிவமைக்கக்கூடிய ஒரு திருப்புமுனை கண்டுபிடிப்பாக, மிக நெருக்கமான இரட்டை விண்மீன் அமைப்பில் பழுப்பு நிற விண்மீன் ஒன்றைத் துணையாகக் கொண்டுள்ள புளூ ஸ்ட்ராக்ளர் விண்மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே இத்தகைய விண்மீன் அமைப்பு உறுதி செய்யப்பட்டு கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.

குவஹாத்தி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலி ஹசன் ஷேக், பேராசிரியர் பிமன் ஜே மேதி, ஐஎன்ஏஎஃப்-கட்டானியாவைச் சேர்ந்த டாக்டர் செர்ஜியோ மெஸ்ஸினா, பேராசிரியர் அன்னபூர்ணி சுப்பிரமணியம் மற்றும் ஐஐஏ, பெங்களூரைச் சேர்ந்த பேராசிரியர் ராம் சாகர், ஏஆர்ஐஇஎஸ், நைனிடாலைச் சேர்ந்த டாக்டர் நீலம் பன்வார் ஆகியோர் அடங்கிய குழு, இந்த அமைப்பு சுமார் 5.6 மணி நேரம் (0.234 நாட்கள்) என்ற குறுகிய சுற்றுப்பாதை காலத்தை கொண்டுள்ளது என்பதைக் கண்டறிந்தது.

 

இந்த ஆய்வானது நட்சத்திரங்கள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகின்றன, ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்பு கொள்கின்றன மற்றும் தீவிர விண்வெளிச் சூழல்களில் எவ்வாறு தப்பிப்பிழைக்கின்றன என்பது பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது.

வானியல்  ஆய்வகங்கள் மற்றும் விண்வெளி பயணங்களிலிருந்து தரவைப் புரிந்துகொள்வதில் பரவலாகப் பயன்படுத்தப்படும் விண்மீன் பரிணாமம், பைனரி தொடர்புகள் மற்றும் துணை விண்மீன் பொருள்களின் தத்துவார்த்த மாதிரிகளைச் செம்மைப்படுத்த இந்த முடிவுகள் உதவுகின்றன. கூடுதலாக, காப்பகத் தரவுகளின் புதுமையான பகுப்பாய்வு எவ்வாறு பெரிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை நிரூபிப்பதன் மூலம் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஊக்கமளிக்கிறது,

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262774&reg=3&lang=1

 

***

SS/PKV/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2262890) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी