சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, ராஜபாளையம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் இபிஎஃப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்வு முகாம்களை நடத்துகின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 3:00PM by PIB Chennai
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகமும் இணைந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் குறைகளை விரைவாக தீர்க்கவும், “நிதி உங்கள் அருகில்" மற்றும் “சுவிதா சமகம்" என்ற பெயரில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் தொடர்பு மற்றும் குறைதீர் முகாமை நடத்துகின்றன. இந்த முகாம், 2026 மே 27 அன்று மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நடைபெற உள்ளது
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் தொடர்பான கோரிக்கைகள், குறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த முகாமில் நேரடியாக தீர்வு காணலாம். பங்கேற்க விரும்புவோர் https://t.ly/nPTt என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம்.
மதுரை ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், பழங்காநத்தம், மதுரை
சிவகங்கை ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், சிவகங்கை
இராமநாதபுரம் ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், ராமநாதபுரம்
தேனி ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், தேனி
விருதுநகர் ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், ராஜபாளையம்
திண்டுக்கல் ஈ.எஸ்.ஐ.சி. கிளை அலுவலகம், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.
***
SS/IR/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2262812)
வருகையாளர் எண்ணிக்கை : 35