சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன செயல்பாடுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கின்றன: மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 7:19PM by PIB Chennai

ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் ராஜஸ்தான் வளாகத்தில், மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உலகின் மிகப்பெரிய வெள்ளி உற்பத்தி செய்யும் மேம்பட்ட நிலத்தடிச் சுரங்கங்களில் ஒன்றான இந்நிறுவனத்தின் சிண்டேசர் குர்த் சுரங்கம், அதிநவீன உருக்கு ஆலையான தரிபா உருக்கு வளாகம் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.

 

அப்போது பேசிய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய இந்தியாவின் பயணம், அதன் கனிம வளங்கள், உள்நாட்டுத் திறன்கள், எதிர்காலத்திற்குத் தயாரான தொழில்களின் வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் என்றார். ஹிந்துஸ்தான் ஸிங்க்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள், நாட்டின் சுரங்கத் துறை எவ்வாறு ஒரு நவீனமான, பொறுப்பான தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 

ஆண்டுக்கு 1.1 மில்லியன் டன்களுக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட உலோக உற்பத்தித் திறனுடன், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் இந்தியாவின் கனிமப் பாதுகாப்பையும் உள்நாட்டு உலோகச் சூழலமைப்பையும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது என அவர் தெரிவித்தார். இறக்குமதிச் சார்பைக் குறைப்பதிலும், கனிமப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், நாட்டிற்கு நீண்டகாலப் பொருளாதார மதிப்பை வெளிக்கொணர்வதிலும் இந்நிறுவனம் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார். இந்நிறுவன செயல்பாடுகள் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன என்றும் திரு கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

 

இந்த ஆய்வுப் பயணத்தின்போது ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு அருண் மிஸ்ரா, சுரங்க அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு விவேக் பாஜ்பாய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262474&reg=3&lang=1

 

(Release ID : 2262474)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262510) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी