இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய சுகாதார இயக்கம் தொடர்பான ஐந்தாவது அறிவியல் வழிகாட்டுதல் குழுக் கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 6:18PM by PIB Chennai

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான பேராசிரியர் அஜய் கே. சூட் தலைமையில், ஒரே சுகாதார இயக்கம் குறித்த அறிவியல் வழிகாட்டுதல் குழுவின் ஐந்தாவது கூட்டம், இன்று (2026 மே 18) புதுதில்லியில் உள்ள கடமை மாளிகையில் நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில், சுகாதாரத் துறைச் செயலாளரும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பஹல், பொது பாதுகாப்பு முகமையின் அறிவியல் செயலாளர் டாக்டர் பர்விந்தர் மைனி, புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் ரஞ்சன் தாஸ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிரதிநிதிகள், உயிரி தொழில்நுட்பத் துறை பிரதிநிதிகள், மருந்துத் துறை உள்ளிட்டவற்றின் மூத்த பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

ஒரே சுகாதார' அணுகுமுறையை முன்னெடுத்துச் செல்வதில் அனைத்து அமைச்சகங்கள், துறைகளின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் தீவிரப் பங்களிப்பையும் திரு அஜய் சூட் பாராட்டினார். மேலும், சமீபத்திய பொது சுகாதார அச்சுறுத்தல்களின் பின்னணியில், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் வலியுறுத்தினார்.

 

கூட்டத்தின் போது, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 'ஒரே சுகாதார நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான மாதிரி ஆளுகைக் கட்டமைப்பு குறித்த காணொலி வெளியிடப்பட்டது. இது, நாடு முழுவதும் நிறுவன ஒருங்கிணைப்பையும் ஒரே சுகாதாரம் திட்டத்தைப் பரவலாக்கப்பட்ட முறையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262444&reg=3&lang=1

 

(Release ID: 2262444)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262495) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी