சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் திட்ட ஒப்புதல் குழு ரூ.450 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 5:53PM by PIB Chennai

மெப்ஸ் இணை மேம்பாட்டு ஆணையர் திரு ஆர்தர் வோர்ச்சியோ தலைமையிலான மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் திட்ட ஒப்புதல் குழு பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பம், ஊட்டச்சத்து மருந்துகள், கிடங்கு மற்றும் சரக்குப் போக்குவரத்து, பொறியியல் சேவைகள் மற்றும் காலணி உற்பத்தி உள்ளிட்ட துறைகள் தமிழ்நாடு, அந்தமான் மற்றும் புதுச்சேரியில் மேலும் விரைவான தொழில்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன.

 

இத்திட்டங்கள் ரூ.450 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை அளித்து சுமார் 6,650 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம், அப்பிராந்தியத்தில் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பை வலுப்படுத்த முடியும்.

 

ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில் உள்ள சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கிராண்ட் அட்லாண்டியா தனியார் நிறுவனம் ரூ.385 கோடி முதலீட்டில் திட்டத்தை தொடங்குவதன் மூலம், 5,180 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் பர்கூரில் உள்ள சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இம்பெக்ஸ் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் வாயிலாக 905 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


பொன்னேரியில் ஒருங்கிணைந்த சென்னை வர்த்தகப் பூங்காவில் தனியார் நிறுவனமான தமிழ்நாடு ஊட்டச்சத்து மருந்து புதுமைக் கண்டுபிடிப்பு மையம் தமது சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தை அமைப்பதன் மூலம், 169 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த ஒப்புதல்கள்தமிழ்நாட்டின் தொழில் சூழலின் விரைவான வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றன.

***

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262455) வருகையாளர் எண்ணிக்கை : 42
இந்த வெளியீட்டை படிக்க: English