சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமரசம் மற்றும் நடுவர் மன்றத்தில் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் மாற்றுப் பிரச்னைகளுக்கான தீர்வை வலுப்படுத்துவது குறித்த பிரிக்ஸ் உயரதிகாரிகள் மற்றும் நீதித்துறை அமைச்சர்கள் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 1:53PM by PIB Chennai

குஜராத் மாநிலம் காந்திநகரில் இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டத்துறை 2026 மே 19, 20 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உயரதிகாரிகள் கூட்டத்திற்கும், மே 21, 22 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் நீதித்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளது. நடப்பாண்டில் பிரிக்ஸ் நீதித்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு இந்தியா தலைமை தாங்குகின்றது.

நிறுவனங்களுக்கு இடையே சமரசம், நடுவர்மன்ற சீர்திருத்தங்கள் உட்பட மாற்றுப் பிரச்னைத் தீர்வு தொடர்பான விவகாரங்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் பொதுத்துறை தகராறுகளில் மாற்றுப் பிரச்னைத் தீர்வின் பங்களிப்பு தொடர்பாக விவாதிக்க, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளை குறைத்தல், உரிய நேரத்தில், குறைவான கட்டணத்தில் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவற்றை பயன்படுத்துவதற்காக மாற்றுப் பிரச்னை தீர்வை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களின் அமலாக்கம் குறித்தும் விவாதத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

பிரிக்ஸ் கட்டமைப்பிற்குள்மாற்றுப் பிரச்னை தீர்வு முறைகள் தொடர்பான ஒத்துழைப்பு குறித்த ஒரு கூட்டு அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான அமைச்சக அளவிலான தளத்தை நீதித்துறை அமைச்சர்கள் கூட்டம் உருவாக்கும். இந்த அறிக்கைசிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதுநிறுவனத் திறன்களை வலுப்படுத்துவதுபயிற்சித் திட்டங்கள்மாதிரி விதிமுறைகள்டிஜிட்டல் பிரச்னை தீர்வுத் தளங்கள் போன்ற மாற்று பிரச்சனை தீர்வு தொடர்பான கூட்டு முயற்சிகளை ஆராய்வது போன்றவற்றிற்கான உறுதியான அம்சங்களை முன்வைக்கும்.

இக்கூட்டங்கள் நடைபெறும் இடமாக குஜராத்தின் காந்திநகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருது, 2026-ம் ஆண்டில் இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ்முக்கிய சர்வதேச சட்ட மற்றும் பல்வகை நிகழ்வுகளுக்கான ஒரு மையமாக இந்நகரம் உருவெடுத்து வருவதைப் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262219&reg=3&lang=1

***

 

 

SS/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262445) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Kannada