சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2026 4:28PM by PIB Chennai
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்களின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு போதுமான அளவு உள்ளதாக, தமிழ்நாடு, புதுச்சேரி எண்ணெய் தொழில்துறை நிறுவனங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் திரு வி சி அசோகன் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த எரிபொருள் விநியோகம் சம்பந்தப்பட்ட கிடங்குகளில் இருந்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி நடைபெறுகிறது. எரிபொருள் விநியோகங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நுகர்வோர்களின் எரிபொருள் தேவைக்கேற்ப அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் எரிபொருள் இருப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் பதட்டமடைய வேண்டாம் என்றும், எரிபொருளை அதிக இருப்பு வைக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கு தடையின்றி எரிபொருளை விநியோகம் செய்வதை உறுதி செய்ய எண்ணெய் சந்தை நிறுவனங்கள் உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
***
SS/IR/LDN/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2262361)
வருகையாளர் எண்ணிக்கை : 65