மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
அரசுத் தரவுகளுக்கான இணையப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது குறித்த தேசிய கலந்தாய்வுப் பயிலரங்கம்
प्रविष्टि तिथि:
16 MAY 2026 8:10PM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், "அரசுத் தரவுகளுக்கான இணையப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல்" என்ற தலைப்பிலான ஒரு தேசிய கலந்தாய்வுப் பயிலரங்கை, 2026 மே 11 அன்று புதுதில்லியில் நடத்தியது. இதில், அமைச்சக செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன், இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (CERT-In), தேசிய தகவல் மையம் (NIC) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
5-வது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதல்களின்படி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட, “மாநிலத் தரவுகளுக்கான இணையப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பிலான நான்கு கட்டத் துறைசார் உச்சிமாநாட்டின் இரண்டாம் கட்டமாக இந்தப் பயிலரங்கம் அமைந்தது. இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கட்டமைக்கப்பட்ட கலந்தாலோசனைகள் மூலம், மாநில அரசுகளுக்கான ஒரு விரிவான தேசிய இணையப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்குவது, இதன் நோக்கமாகும் .
பயிலரங்கில் உரையாற்றிய அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், இந்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான, ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் ஒரு மீள்திறன் மிக்க மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் ஆளுகை சூழலியலை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினார். பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் மாநில அரசுகளால் நம்பிக்கையுடன் பராமரிக்கப்படும் சுகாதாரப் பதிவுகள், நிலப் பட்டாக்கள், கல்விச் சான்றுகள் போன்ற குடிமக்களின் தரவுகளைப் பாதுகாப்பது ஒரு அடிப்படை நிர்வாகப் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261823®=3&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2261928)
आगंतुक पटल : 46