பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினரின் நீடித்த வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு: தில்லி ஐஐடியில் கருத்தரங்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2026 9:56PM by PIB Chennai

'பழங்குடியினர் பெருமிதத் திருவிழா 2026' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகமும், ஐஐடி தில்லியின் பகவான் பிர்சா முண்டா பிரிவும் இணைந்து "நிலையான பழங்குடியினர் மேம்பாட்டில் செயற்கை நுண்ணறிவு  மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு" என்ற கருத்தரங்கை நடத்தின. பழங்குடியின மக்களின் பாரம்பரியம் மற்றும் சாதனைகளைப் போற்றும் வகையில் இக்கொண்டாட்டம் மே 10 முதல் ஜூன் 9 வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது.

 

இக்கருத்தரங்கில், தொலைதூரப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்குத் தொழில்நுட்பங்கள் எவ்வாறு சென்றடைய வேண்டும் என்பது குறித்துக் கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் விவாதித்தனர். அமைச்சகத்தின் துணைச் செயலாளர் திரு. கணேஷ் நாகராஜன் பேசுகையில், இந்தியாவில் அழியும் நிலையிலுள்ள 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின மொழிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், கோண்டி, முண்டாரி, பிலி, சந்தாலி ஆகிய மொழிகளை ஆதரிக்கும் அமைச்சகத்தின் 'ஆதி வாணி'  என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார். இத்தளம் கல்வி, மருத்துவம் மற்றும் அரசுச் சேவைகளை எளிதாக்குகிறது.

 

தொழில்நுட்பத் திட்டமிடலில் பழங்குடியின மக்களை மையமாக வைக்க வேண்டும் என்றும், கல்வித் தரத்தை உயர்த்தவும் தரவுப் பாதுகாப்புடன் கூடிய பொறுப்பான ஏஐ பயன்பாட்டை உருவாக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261660&reg=3&lang=2

செய்தி அடையாள எண்: 2261660

***

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261703) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी