வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிர்வாகச் செலவைக் குறைத்து, உற்பத்தித் திறனை அதிகரிக்கப் புதிய திட்டம்!: மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2026 7:49PM by PIB Chennai

பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் அரசு நிர்வாகத்தை எளிதாக்கும் வகையில், ஒரு முக்கிய திட்டத்தை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையில் நேற்று (மே 15) அறிமுகப்படுத்தினார்.

 

இதன்படி, மும்பையில் ஆங்காங்கே சிதறி கிடக்கும் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் அனைத்து அலுவலகங்களும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.

 

பிரதமர் நரேந்திர மோடியின் ‘எளிதாக வாழ்தல்’ மற்றும் ‘எளிதாக வணிகம் செய்தல்’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 140 கோடி மக்களும் அரசுடன் தொடர்பு கொள்ளும்போது, எந்தவித சிரமமும் இன்றி மிக எளிதாகத் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

 

தற்போது மும்பையில் மட்டும் இந்த அமைச்சகத்தின் 12 அமைப்புகளைச் சேர்ந்த 20 அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. இதற்காகப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இனி, இந்த அலுவலகங்கள் அனைத்தும் சாத்தியமான வரை ஒரே மையத்தில் ஒன்றிணைக்கப்படும். இந்த அதிநவீன மையத்தில் உயர்தர மின்னணுத் தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அமைச்சகத்தின் கீழ் உள்ள 46 அமைப்புகளை ஒரே இடத்தில் இருந்து தொடர்பு கொள்ள முடியும்.

 

இந்த மையத்தில் பொதுமக்களுக்கு உதவ பிரத்யேக அதிகாரிகள் இருப்பார்கள். இதனால் நிர்வாகச் செலவுகள் குறைந்து, உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், வணிகர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் அரசு வேலைகள் சுலபமாகும். மேலும், மக்கள் வெவ்வேறு இடங்களுக்கு அலைவது தவிர்க்கப்படுவதால், எரிபொருள் மிச்சமாகி சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்று அமைச்சர் திரு. பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261573&reg=3&lang=1

 

செய்தி அடையாள எண்: 2261573

***

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261689) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: Gujarati , English , Urdu , हिन्दी , Marathi