பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய-இலங்கை கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐஓஎஸ் சாகர் கப்பல், கொழும்பு துறைமுகத்தை அடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 7:43PM by PIB Chennai
16 நட்பு வெளிநாடுகளைச் சேர்ந்த பணியாளர்களைக் கொண்ட இந்தியப் பெருங்கடல் கப்பலான (ஐஓஎஸ்) சாகர், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் தனது செயல்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக, இன்று கொழும்புத் துறைமுகத்தை சென்றடைந்தது. இந்தியக் கடற்படைக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையேயான வலுவான கடல்சார் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை இந்த பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தப் பயணத்தின் போது, ஐஓஎஸ் சாகர் கப்பலின் தலைமை அதிகாரி, இலங்கை கடற்படையின் மூத்த அதிகாரிகளைச்சந்திக்க உள்ளார். மேலும், இலங்கை கடற்படையின் தலைமைத் தளபதி, கப்பலைப் பார்வையிட்டு, அதில் உள்ள பன்னாட்டுப் பணியாளர்களுடன் கலந்துரையாடுவார்.
தொழில்முறை மற்றும் கலாச்சார ஈடுபாடுகளின் ஒரு பகுதியாக, ஐஓஎஸ் சாகரின் பன்னாட்டுக் குழுவினர்,தங்கள் பயணத்தின் நோக்கங்களை எடுத்துரைக்கும் ஊடகக் கலந்துரையாடல்களில் பங்கேற்பார்கள். மக்களுக்கிடையேயான ஆழமான உறவுகளையும் பரஸ்பர புரிதலையும் மேம்படுத்துவதற்காக, குழுவினர் கொழும்புத் துறைமுகம், காலி, கண்டி மற்றும் பின்னவலா ஆகிய இடங்களுக்குக் கலாச்சாரப் பயணங்களையும் தொழில்முறை சுற்றுப்பயணங்களையும் மேற்கொள்வார்கள். இலங்கைக் கடற்படையுடன் இணைந்து மேற்கொள்ளும் PASSEX கடல்சார் பயிற்சியைத் தொடர்ந்து, ஐஓஎஸ் சாகர் 2026 மே 18 அன்று கொழும்பிலிருந்து புறப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261567®=3&lang=2
(Release ID: 2261567)
***
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261684)
வருகையாளர் எண்ணிக்கை : 7