பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாகப் பயிற்சி நிறுவனங்கள் காலத்திற்கேற்ப மாற வேண்டும்: மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் வலியுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 7:29PM by PIB Chennai
நாடெங்கிலும் உள்ள நிர்வாகப் பயிற்சி நிறுவனங்கள் பழைய நடைமுறைகளைக் கைவிட்டு, காலத்திற்கேற்ப தங்களை மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார். "திறன் மேம்பாட்டை நிறுவனமயமாக்குதல்" என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், 'மிஷன் கர்மயோகி' திட்டம் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த ஆட்சி முறையை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டார்.
நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், 2014-இல் 2 லட்சமாக இருந்த பொதுமக்களின் புகார்கள், தற்போது 25 முதல் 30 லட்சமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இது அரசின் மீதான மக்களின் நம்பிக்கையையும், அரசின் விரைவான செயல்பாட்டையும் காட்டுவதாக அவர் கூறினார். மேலும், டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் திட்டத்தின் மூலம் சுமார் 11 கோடி ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நிர்வாகத்திற்குப் பெரிதும் உதவும் என்றாலும், மனித உணர்வுகள் மற்றும் நற்பண்புகளுக்கு அது மாற்றாகாது என்று அவர் வலியுறுத்தினார். ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் நவீன நிர்வாக முறைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அடிமட்ட அளவில் மக்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்படும் போதுதான் உண்மையான நிர்வாகச் சீர்திருத்தம் வெற்றியடையும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் மத்திய மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261561®=3&lang=2
செய்தி அடையாள எண்: 2261561
***
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261682)
வருகையாளர் எண்ணிக்கை : 6