சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹிந்துஸ்தான் காப்பர் சாதனை: லாபம் 95 சதவீதம் அதிரடி உயர்வு

प्रविष्टि तिथि: 15 MAY 2026 7:24PM by PIB Chennai

மத்திய சுரங்கத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனம், 2025-26 நிதி ஆண்டில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்று வெளியான நிதிநிலை முடிவுகளின்படி, நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் 95 சதவீதம் உயர்ந்து 1,232.73 கோடி ரூபாயாகப் பதிவாகியுள்ளது. இது நிறுவன வரலாற்றிலேயே மிக அதிகமான லாபமாகும்.

 

செயல்பாட்டு வருவாய் 49 சதவீதம் அதிகரித்து 3,077.92 கோடி ரூபாயை எட்டியுள்ளது. வரிக்கு பிந்தைய நிகர லாபமும் 97 சதவீதம் உயர்ந்து 920.67 கோடி ரூபாயாக உள்ளது. தாது உற்பத்தி 6 சதவீதமும், உலோக விற்பனை 12 சதவீதமும் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டை ஒட்டி, பங்குதாரர்களுக்கு இறுதி ஈவுத்தொகை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 2030-ஆம் ஆண்டிற்கான நிறுவன விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நாட்டின் முன்னணி செப்புச் சுரங்க நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பரின் இந்த அபார வளர்ச்சி பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261552&reg=3&lang=2

செய்தி அடையாள எண்: 2261552

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2261657) आगंतुक पटल : 42
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी