அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

போபால் ஆம்பிரி நிறுவனத்தின் 46-வது ஆண்டு விழா:

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2026 6:02PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் கீழ் இயங்கும் போபால் ஆம்பிரி நிறுவனம் தனது 46-வது நிறுவன தினத்தை மே 12 முதல் 14 வரை சிறப்பாகக் கொண்டாடியது.

 இந்த விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக, வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் ஒலி கண்காணிப்பு மற்றும் எல்லை நிர்ணய உள்நாட்டுத் தொழில்நுட்பம், நொய்டாவைச் சேர்ந்த மெட்டியோ எக்ஸ்பர்ட்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற  நிறுவனத்திடம் வணிகப் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது. மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மன்றத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் என். கலைச்செல்வி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிகழ்வில் பேசிய டாக்டர் கலைச்செல்வி, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஆராய்ச்சி மன்றம் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்தார். ஆம்பிரி நிறுவன இயக்குனர் டாக்டர் தல்லடா பாஸ்கர் பேசுகையில், வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு இக்கருவி மிகவும் உதவியாக இருக்கும் என்றார். இக்கருவியை உருவாக்கிய முதன்மை விஞ்ஞானி டாக்டர் கீர்த்தி சோனியின் குழுவினரைப் பாராட்டிய அதிகாரிகள், இது போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற உதவும் என்று குறிப்பிட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261496&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2261496

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261632) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी