சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சிவிஆர்டிஇ ஆய்வகத்தின் 52-வது நிறுவன தின கொண்டாட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 6:06PM by PIB Chennai

சென்னையையடுத்த ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான சிவிஆர்டிஇ ஆய்வகத்தின் 52-வது நிறுவன தின கொண்டாட்டம் இன்று (15.05.2026) அதன் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிவிஆர்டிஇ இயக்குநர் திரு ஜே ராஜேஷ்குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆய்வகத்தின் அண்மைகால சாதனைகள் குறித்து திரு ராஜேஷ்குமார் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்கள், கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

------
SS/PLM/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261538)
வருகையாளர் எண்ணிக்கை : 26