சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலையிலான தேர்வு 2025-க்கான இறுதி முடிவுகளை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 5:16PM by PIB Chennai
ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலையிலான தேர்வு 2025-க்கான இறுதி முடிவுகளை பணியாளர் தேர்வாணையம் 14.05.2026 அன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 15,118 தேர்வர்கள் குரூப் “பி” குரூப் “சி” நிலையிலான பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வருமானவரித்துறை, சரக்கு மற்றும் சேவை வரிகள் துறை, கணக்குத் தணிக்கை அலுவலகம், அஞ்சல்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
நாடு முழுவதும் இந்தப் பணிகளுக்கான முதல் கட்டத் தேர்வு 2025 செப்டம்பரில் நடைபெற்றது. இந்தத் தேர்வை 28 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் 1,40,000 பேர் இரண்டாம் கட்டத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இரண்டாம் கட்டத்தேர்வு 2026 ஜனவரியில் நடைபெற்றது. இறுதி முடிவுகள் ssc.gov.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261451®=3&lang=2
***
SS/PLM/KPG/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2261498)
வருகையாளர் எண்ணிக்கை : 23