சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

“சிறுபான்மையினர் நலன் – வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” குறித்த தேசிய மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 7:06PM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம், “பங்கேற்பின் மூலம் செழிப்பு” என்ற வழிகாட்டுதல் கருப்பொருளின் கீழ், “சிறுபான்மையினர் நலன் – வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான  செயற்கை நுண்ணறிவு சார்ந்த அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” குறித்த தேசிய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. பங்கேற்பு சார்ந்த நிர்வாகம், கூட்டுறவு கூட்டாட்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றின் மூலம், சிறுபான்மையினர் நலனை மாற்றியமைப்பதற்கான ஒரு செயல் திட்டத்தை வகுக்க, நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளை இந்த மாநாடு ஒன்றிணைத்தது.

2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்டும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவ இந்தியாவை உருவாக்கும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, கொள்கை சார்ந்த விவாதங்கள், பங்குதாரர்களுடனான கலந்தாய்வுகள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான ஒரு உயர்மட்ட தளமாக இந்த நிகழ்வு அமைந்தது. செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஒவ்வொரு அமைச்சகத்தின் செயல்பாடுகளிலும், நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு ஆகியோரின் அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, சிறுபான்மையினருக்கு, மேலும் திறம்படச் சேவையாற்றும் வகையில், உரையாடல் சார்ந்த செயற்கை நுண்ணறிவு  செயலிகளை உருவாக்கும் முயற்சியில், மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் ஸ்ரீவத்ஸ கிருஷ்ணா, இந்த மாநாட்டை மத்திய அரசுக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் இடையே ஆக்கபூர்வமான உரையாடல்கள், சிக்கல்களுக்கான தீர்வுகள் மற்றும் புதுமையான கருத்துப் பரிமாற்றங்களுக்கான ஒரு வெளிப்படையான விவாத மன்றமாக இருந்ததாக விவரித்தார். சிறுபான்மையின சமூகங்களுக்கான நலத்திட்டங்களை, அடைப்படை நிலையில் திறம்படச் செயல்படுத்துவதை உறுதிசெய்ய ஏதுவாக, தொடர்ச்சியான நிறுவன ரீதியான ஈடுபாடும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளும் அவசியம் என்பதை அமைச்சகம் வலியுறுத்தியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261154&reg=3&lang=2

**

TV/SV/EA


(வெளியீட்டு அடையாள எண்: 2261372) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी