உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
லே பகுதியில் பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்ட மஹோத்சவம்': மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தொடங்கி வைத்தார்!
प्रविष्टि तिथि:
14 MAY 2026 5:47PM by PIB Chennai
மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திரு. சிராக் பாஸ்வான், லே பகுதியில் பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின்' கீழ் அமைக்கப்பட்ட கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சி உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், சந்தை வாய்ப்புகளை பலப்படுத்தவும் லடாக் நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. அங்குள்ள அரங்குகளுக்குச் சென்ற அமைச்சர், பயனாளிகளின் வெற்றிக் கதைகளைக் கேட்டறிந்து அவர்களை ஊக்குவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அமைச்சர், "உணவு பதப்படுத்தும் துறையில் லடாக்கிற்குப் பெரும் ஆற்றல் உள்ளது. 2014-ல் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்ற பிறகு, இத்துறைக்கான மதிப்பு கூட்டல் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. லடாக்கின் தனித்துவமான பொருட்களான 'சீ பக்ஹார்ன்' மற்றும் ஆப்ரிகாட் ஆகிய இரண்டுக்கும் சர்வதேச சந்தையில் முத்திரை பதிக்கும் தகுதி உள்ளது" என்றார்.
மேலும், நாடு முழுவதும், வாங்குவோர்-விற்பனையாளர் சந்திப்புகளை அதிக அளவில் நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் லடாக் நிர்வாக அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261086®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2261086
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2261251)
आगंतुक पटल : 53