சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

விழுப்புரத்தில் புதிய ஆதார் சேவை மையத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திறந்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 14 MAY 2026 4:43PM by PIB Chennai

விழுப்புரத்தில் புதிய ஆதார் சேவை மையத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இன்று திறந்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலக அதிகாரிகள், பத்திரிகை தகவல் அலுவலகம், ஆகாஷ்வாணி, தூர்தர்ஷன் மற்றும் பிஎல்எஸ் இன்டர்நேஷ்னல் பிரதிநிதிகள் முன்னிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு எஸ். ஷேக் அப்துல் ரஹ்மான் இந்த மையத்தை திறந்து வைத்தார்.

ஆதார் பதிவு, பயோமெட்ரிக் புதுப்பித்தல், குறைதீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த மையத்தில் வழங்கப்பட உள்ளது. பொது விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் இந்த மையம் செயல்படும்.

இந்நிகழ்ச்சியில் புதிய மையம் குறித்து பேசிய இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு மண்டல அலுவலக இயக்குநர் திரு பவன் குமார் பஹ்வா, கடந்த இரண்டு நாட்களில் கிருஷ்ணகிரி, வேலூர் நகரங்களில் திறக்கப்பட்ட இரண்டு புதிய ஆதார் மையங்கள் உட்பட இதுவரை தமிழ்நாட்டில் 5 ஆதார் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விழுப்புரத்தில் புதிய மையம் திறக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டில் 6-வது ஆதார் சேவை மையம் தற்போது செயல்படுவதாக அவர் கூறினார். 2026 செப்டம்பர் மாதத்திற்குள் தமிழ்நாட்டில் மேலும் 24 ஆதார் சேவை மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திரு பவன் குமார் பஹ்வா குறிப்பிட்டுள்ளார். ஆதார் சேவைகளுக்காக https://bookappointment.uidai.gov.in/ என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    

****

TV/IR/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261141) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: English