சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஜிப்மரில் செவிலியர் மற்றும் துணை சுகாதார அறிவியல் படிப்புகளை நிறைவு செய்த 320 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAY 2026 3:00PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) செவிலியர் மற்றும் துணை சுகாதார அறிவியல் படிப்புகளை நிறைவு செய்தவர்களுக்கான 12-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் புன்ய சலீலா ஸ்ரீவஸ்தவா உரையாற்றினார்.
பட்டமளிப்பு என்பது பட்டம் பெறும் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் அம்சமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் விவரித்தார். பட்டம் பெறுவோர் தங்கள் பணியை சேவை, இரக்கம், நாட்டைக் கட்டமைத்தல் ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அவர்களுடைய பங்களிப்புகள் நாட்டின் சுகாதார பராமரிப்பு முறையின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் வடிவமைக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் பொது சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளை சுட்டிக்காட்டிய அவர், தடுப்பு, மேம்படுத்துதல், குணப்படுத்துதல், மறுவாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான அணுகுமுறையை முன்னிலைப்படுத்துவதாக 'தேசிய சுகாதாரக் கொள்கை 2017'-ஐக் குறிப்பிட்டார். சுகாதாரச் சேவையாற்றுவதில் இத்தகைய முக்கிய அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை முன்னெடுத்துச் செல்வதில், பட்டம் பெறும் ஒவ்வொரு மாணவரும் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மாற்றத்தக்க தாக்கம் குறித்து பேசிய அவர், அதன் நான்கு அடிப்படைகள் குறித்து விவரித்தார்.

தற்போது 1.8 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் இயங்கிவரும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களின் கட்டமைப்பு குறித்து அவர் சுட்டிக்காட்டினார். கருத்தரித்தல் மற்றும் குழந்தை நலன் சார்ந்த முதன்மை நோக்கத்திலிருந்து, தொற்றா நோய்களைக் கண்டறிதல், தொடக்க நிலையிலேயே நோய்களைக் கண்டறிதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றின் மீது பரந்த அளவில் கவனம் செலுத்தும் ஒரு புதிய முன்னுதாரண மாற்றத்தை இந்த மையங்கள் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
மொத்தம் 320 மாணவர்களுக்கு அவர் பட்டங்களை வழங்கினார். படிப்பில் சிறந்து விளங்கிய 24 மாணவர்களுக்கு பதக்கங்களையும், பரிசுகளையும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260976®=3&lang=1
***
SS/IR/RJ/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2261068)
வருகையாளர் எண்ணிக்கை : 19