சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதிய ஆதார் சேவை மையம் வேலூரில் திறக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 13 MAY 2026 4:29PM by PIB Chennai

வேலூர் விருதுபட்டில் புதிய ஆதார் சேவை மையம் 2026 மே 13 அன்று தொடங்கப்பட்டது.

இதை வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வி ஆர் சுப்புலட்சுமி திறந்து வைத்தார். பெங்களூருவில் உள்ள  இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்  மண்டல அலுவலகம் இதனை நடத்தியது. ஆதார் பதிவு, பயோமெட்ரிக்  புதுப்பிப்பு, திருத்தம் மற்றும் குறைதீர்க்கும் சேவைகள் ஒரே இடத்தில் அளிக்கப்பட உள்ளது.

இந்தப் புதிய மையம் குறித்து உரையாற்றிய இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு மண்டல இயக்குநர் திரு பவன் குமார் பஹ்வா, சென்னை, மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரிக்கு பிறகு தமிழகத்தில் வேலூரில் 5-வது ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் 25 ஆதார் சேவை மையங்களை திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 2026 செப்டம்பர் மாதத்திற்குள் அதன் எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்கும் என்று கூறினார்.

5 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல்  செப்டம்பர் மாதம் வரை கட்டணமில்லாமல் மேற்கொள்ளப்படும்.  பள்ளி முகாம்கள், ஆதார் சேவை மையங்கள் ஆகியவற்றில் இவ்வசதிகளைப் பெறலாம்.

 

------- 

SS/IR/KPG/EA


(रिलीज़ आईडी: 2260674) आगंतुक पटल : 137
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English