சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய தொழில்நுட்ப தினம் 2026: 3 உள்நாட்டு மருத்துவத் தொழில்நுட்பங்களை தொழில் துறையினருக்கு வழங்கியது ஐ.சி.எம்.ஆர்
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAY 2026 5:58PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனத்தில் (NII), தேசிய தொழில்நுட்ப தினம் 2026-ஐ முன்னிட்டு ‘விஞ்ஞான்-டெக்’ சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவின் மிக முக்கிய மைல்கல்லாக, ஐசிஎம்ஆர் அமைப்பால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று உயர்நிலை மருத்துவத் தொழில்நுட்பங்கள், அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில் இந்த தொழில்நுட்ப மாற்றத்திற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனையை எளிதாக்கும் PSP94 ELISA கருவி கிருஷ்ஜென் லேப்ஸ் நிறுவனத்திடமும், இரத்த உறைதல் குறைபாடுகளைக் கண்டறியும் பாயிண்ட்-ஆஃப்-கேர் கருவி மெரில் லைஃப் சயின்சஸ் நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டன. மேலும், டெங்கு, சிக்குன்குன்யா மற்றும் ஜிகா வைரஸ்களை ஒரே சோதனையில் கண்டறியும் மல்டிபிளக்ஸ் RT-PCR கருவி வான்கார்ட் லைஃப் சயின்சஸ் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கோவாக்சின் மற்றும் காசநோய் கண்டறியும் கிரிஸ்பர் கருவி உள்ளிட்ட ஆறு உயர்தர உள்நாட்டு கண்டுபிடிப்புகளையும் ஐசிஎம்ஆர் காட்சிப்படுத்தியது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், சுகாதாரத் துறையில் இந்தியா தற்சார்பு அடைவதையும், தரமான மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் சாமானிய மக்களைச் சென்றடைவதையும் உறுதி செய்யும் வகையில் இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259926®=3&lang=1
EA/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2260349)
வருகையாளர் எண்ணிக்கை : 7