ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சணல் பயிர் தகவல் அமைப்பு மூலம் தேசிய சணல் வாரியம் புதிய மைல்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 11 MAY 2026 1:48PM by PIB Chennai

இந்திய சணல் துறை, செயற்கைக்கோள் தரவு மற்றும் வானிலை ஆய்வுகளை உள்ளடக்கிய சணல் பயிர் தகவல் அமைப்பு (JCIS) மூலம் புதிய தொழில்நுட்ப சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்  மற்றும் இந்திய சணல் கழகத்துடன் இணைந்து தேசிய சணல் வாரியம் இத்திட்டத்தை 2023 முதல் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், சணல் சாகுபடியைக் கண்காணிக்க 'புவன் ஜம்ப்என்ற மொபைல் செயலியும், தரவுகளை ஆய்வு செய்ய 'பட்சயன்என்ற இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னதாக, சணல் உற்பத்தி மதிப்பீடுகள் துல்லியமற்ற முறையிலேயே இருந்தன. தற்போது, நிலப்பரப்பு வரைபடம் மற்றும் புவிசார் குறியீடுகள் மூலம் பயிர் பரப்பளவு, விளைச்சல் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் துல்லியமாக மதிப்பிட முடிகிறது.

விவசாயிகளுக்கு வானிலை மற்றும் பயிர் பாதிப்புகள் குறித்த குறுஞ்செய்தி எச்சரிக்கைகளை வழங்குவதோடு, வரும் காலங்களில் இத்திட்டத்தை கூடுதல் மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த தேசிய சணல் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த அறிவியல் பூர்வமான அணுகுமுறை, சணல் துறை சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதில் மத்திய அரசுக்கு பெரிதும் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259748&reg=3&lang=1

EA/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2260304) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali