சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2026-ம் ஆண்டு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்கினார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAY 2026 1:40PM by PIB Chennai
சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026-ம் ஆண்டிற்கான தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை இன்று (12.05.2026) வழங்கினார். புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த சேவையாற்றிய செவிலியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் உரையாற்றிய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, கருணை, அர்ப்பணிப்புணர்வு, நாட்டிற்கு சேவையாற்றும் நோக்குடன் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாயளர்களின் விலைமதிப்பற்ற சேவைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விருதுகள் அமைந்துள்ளன என்று அவர் தெரிவித்தார். சவாலான சூழலில சுகாதார சேவைகளை வழங்குவதில் செவிலியர் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நோயாளிகளைப் பராமரிப்பதில் உயர்ந்த தரநிலையுடன் அவர்கள் ஆற்றும் அளப்பரிய சேவைகளுக்கும் அயராத முயற்சிகளுக்கும் இந்த விருதைப் பெற்ற அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா கலந்துகொண்டார்.
செவிலியர்களின் சிறந்த சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் 1973-ம் ஆண்டில் இந்த தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்க முடிவு செய்தது.
2026-ம் ஆண்டிற்கான இந்த தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது மொத்தம் 15 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260185®=3&lang=1
***
SS/SV/RJ/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2260271)
வருகையாளர் எண்ணிக்கை : 6