அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை மையத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 MAY 2026 5:31PM by PIB Chennai
மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட 'சத்தி' (SATHI) என்ற பல்துறை மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாட்டில் மேம்பட்ட தொழில்நுட்பம், புத்தாக்கம், அறிவியல் வசதிகளுக்கான அணுகல் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விரிவுபடுத்தும் நோக்கில், அறிவியல், தொழில்நுட்பத் துறை, பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் அறிவியல் ஆராய்ச்சி ஆதரவு அமைப்புகளை விரிவுபடுத்தி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்கள், இளம் ஆராய்ச்சியாளர்களிடையே அறிவியல் மனப்பான்மை, தொழில்நுட்பத் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, ஆய்வகங்கள், ஆராய்ச்சித் திட்டங்கள் மூலம் பல பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இணைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரின் இந்த ஆய்வின்போது, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், சத்தி மையத்தின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259541®=3&lang=1
***
(Release ID: 2259541)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2259608)
வருகையாளர் எண்ணிக்கை : 9