அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பிரமாண்ட நட்சத்திரங்கள் அருகிலுள்ள மூலக்கூறுகள், மேகத்தில் விண்மீன் உருவாக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன
இடுகை இடப்பட்ட நாள்:
08 MAY 2026 3:51PM by PIB Chennai
பிரமாண்ட நட்சத்திரங்கள் அருகிலுள்ள பகுதிகளில் விண்மீன்கள் உருவாக்கத்தைத் தொடங்க முடியும் என்பதையும், அதன் மூலம் நட்சத்திர உருவாக்கப் பகுதிகளின் பரிணாமத்தை வடிவமைக்க உதவுகின்றன என்பதையும் விளக்கும் புதிய சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மூலக்கூறு மேகங்கள் எனப்படும் பரந்த வாயு மற்றும் மாசு நிறைந்த பகுதிகளில், மேகங்களுக்கு இடையே நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. விண்மீன் மண்டலத்தில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள், சூரியனைப் போன்ற பல்வேறு நிறைவானப் பண்புகளைக் கொண்டிருந்தாலும், சில நட்சத்திரங்கள், அதைவிட அளவில் மிகவும் பெரியவை (சூரியனின் நிறையைக் காட்டிலும் எட்டு மடங்கிற்கும் அதிகமானவை). இந்த பிரமாண்ட நட்சத்திரங்கள் அரிதானவை என்ற போதிலும், அவை சுற்றுப்புறங்களை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளன. மேலும் சில தருணங்களில். அடுத்த தலைமுறை நட்சத்திரங்களின் உருவாக்கத்திற்கும் பங்களிக்கின்றன.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆராய்ச்சி நிறுவனம், நைனிடாலில் உள்ள ஆரியபட்டா வானியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள், செஃபியஸ் ஒபி2 வகை நட்சத்திர உருவாக்க வளாகத்திற்குள், பூமியிலிருந்து சுமார் 900 பார்செக் தொலைவில் அமைந்துள்ள பிரகாசமான மேகம் 44 எனப்படும் ஒரு பகுதியை ஆய்வு செய்தனர். மேலும், பிரமாண்ட நட்சத்திரங்கள் வெளியிடும் புற ஊதா கதிர்வீச்சுகள் மேகத்திற்குள் பரவி, புதிய விண்மீன்களுக்கு தோற்றம் அளிக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259045®=3&lang=1
(Release ID: 2259045)
****
TV/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2259178)
வருகையாளர் எண்ணிக்கை : 11