தேர்தல் ஆணையம்
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் 2,926 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
14 APR 2026 1:44PM by PIB Chennai
இந்திய தேர்தல் ஆணையம் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை மார்ச் 15, 2026 அன்று வெளியிட்டது.
2026 ஏப்ரல் 29 அன்று நடைபெறவிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2026 ஏப்ரல் 9 ஆகவும், மேற்கு வங்க இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனைக்கான தேதி 2026 ஏப்ரல் 10 ஆகவும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி 2026 ஏப்ரல் 13 அன்று பிற்பகல் 3:00 மணி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது .
வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதிக்குப் பிறகு, மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கான மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை:
மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி 152 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 28-ம் தேதி 142 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 1,448 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இரு கட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 2,926 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மக்கள் இசிஐநெட் (ECINet) செயலியில் உள்ள “உங்கள் வேட்பாளரை அறிந்துகொள்ளுங்கள்” (Know Your Candidate) என்ற பகுதியில், வேட்பாளர்களின் கல்வித் தகுதிகள், குற்றப் பின்னணிகள், சொத்துக்கள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் காணலாம். அவர்களுடைய பிரமாணப் பத்திரங்களையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் முன்முயற்சிக்கு இணங்க, வாக்காளர்களின் வசதிக்காக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களும் , அவர்களின் வரிசை எண், பெயர், சின்னம் உள்ளிட்ட விவரங்களும் பெரிய எழுத்துக்களில் இடம்பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2251819®=3&lang=1
***
AD/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2251958)
வருகையாளர் எண்ணிக்கை : 17