சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுவைப் பல்கலைக்கழகத்தில் பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 14 APR 2026 3:05PM by PIB Chennai

பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்தநாளையொட்டி, புதுவைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துரைத்தார்.  இந்திய அரசியலமைப்பை வடிவமைப்பதில் அம்பேத்கரின் தலைமைப் பங்கு, சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பதவி வகித்தது, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டில் ஆற்றிய அயராத உழைப்பு, சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கான போராட்டம், சமூக நீதி, பெண்களின் உரிமைகள், தொழிலாளர் சீர்திருத்தங்கள், இந்திய ரிசர்வ் வங்கியை உருவாக்குவதற்கான கருத்தை முன்வைத்தது போன்ற அம்பேத்கரின் பணிகளை துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு எடுத்துரைத்தார்.

 

ஆசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை குறித்து அறிவார்ந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சமூக உள்ளடக்கம், கல்விக்கான அணுகல், திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிறப்பு இட ஒதுக்கீட்டு பிரிவின் தொடர்பு அதிகாரி பேராசிரியர் பூஷண் டி. சுதாகர் வரவேற்றார். நிகழ்ச்சியை துணைப் பதிவாளர் டாக்டர் அஜய் பாபு ஒருங்கிணைத்தார். பேராசிரியர் கே. தரணிக்கரசு, கலாச்சாரத்துறை இயக்குநர் பேராசிரியர் பி. நடராஜன், பதிவாளர் பேராசிரியர் கே. குணசேகரன், நிதி அலுவலர் பேராசிரியர் எம் கிருஷ்ணமூர்த்தி பிற அதிகாரிகள், இயக்குநர்கள், டீன்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

AD/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2251878) வருகையாளர் எண்ணிக்கை : 37
இந்த வெளியீட்டை படிக்க: English