சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தூய்மையையும் உடல் நலத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஜிப்மர் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 13 APR 2026 12:14PM by PIB Chennai

 

சுகாதார இருவார விழா 2026-ஐ முன்னிட்டி புதுச்சேரியில் 2026 ஏப்ரல் 12 அன்று சைக்கிள் பேரணி நடைபெற்றது. தூய்மையையும் உடல் நலத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில் புதுச்சேரி ராமநாதபுரத்தில் உள்ள ஆயுஷ்மான் ஆரோக்கிய மையம், இந்திய சுகாதார சங்கத்தின் புதுச்சேரி கிளையுடன் இணைந்து இதனை நடத்தியது.

ஜிப்மர் வளாகத்திலிருந்து காலை 6 மணி அளவில் இந்த சைக்கிள் பேரணியை ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிரேம ராஜன், டாக்டர் சுபீதா ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 75 பேர் இதில் பங்கேற்றனர். இந்த சைக்கிள் பேரணியின் இறுதியில் தூய்மை மற்றும் உடல்நல முன்முயற்சிகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டியதன் அவசியம் குறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் வடிவேல், டாக்டர் சுபீதா ஆகியோர் வலியுறுத்தினார்கள்.

பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வு சுத்தமான, ஆரோக்கியமான மற்றும் உற்சாகமான சமூகத்தை உருவாக்குவதில் ஒருங்கிணைந்த முயற்சியின் அவசியத்தை எடுத்துக்காட்டியது.

***

SS/IR/PD
 


(வெளியீட்டு அடையாள எண்: 2251476) வருகையாளர் எண்ணிக்கை : 47
இந்த வெளியீட்டை படிக்க: English