குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் 364 தொகுப்பு மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்துள்ளது

प्रविष्टि तिथि: 14 MAR 2026 4:26PM by PIB Chennai

மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் குறு, சிறு நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (MSE-CDP), பொது வசதி மையங்களை (CFCs) நிறுவுதல், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல்/மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிதி உதவியை வழங்குகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 606 திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 242 திட்டங்கள் நடந்து வருகின்றன. 364 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய தொழில்களின் மறுமலர்ச்சிக்கான நிதித் திட்டத்தின் (ஸ்ஃபுர்தி - SFURTI) கீழ், தொகுப்பு அடிப்படையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், பாரம்பரிய தொழில்களை வலுப்படுத்துவதிலும், கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2015-16-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மொத்தம் 513 தொகுப்புகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இதற்கு மத்திய அரசு ₹1,332.95 கோடி நிதியுதவி அளித்துள்ளது. கைவினைப்பொருட்கள், கைத்தறி, வேளாண் பதப்படுத்துதல், தென்னை நார், தேன், தொடர்புடைய தொழில்கள் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சுமார் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு இது பயனளிக்கிறது.

இந்தத் தகவலை மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, மக்களவையில் 2026 மார்ச் 12 அன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240160&reg=3&lang=1

***

(Release ID: 2240160)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2240323) आगंतुक पटल : 72
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी