அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜம்மு-காஷ்மீரின் கதுவா நகரில் ரூ. 600 கோடி மதிப்பிலான மருந்து உற்பத்தி ஆலைக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அடிக்கல் நாட்டினார்
பல்வேறு புதிய வாய்ப்புகளுடன் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது: டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAR 2026 5:56PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள கடதர் கிராமத்தில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவன மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (14.03.2026) அடிக்கல் நாட்டினார். மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் கீழ், உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறினார். இது ஜம்மு - காஷ்மீர் பிராந்தியத்தின் தொழில் திறனில் வளர்ந்து வரும் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 400 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும், அதே அளவில் மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
வளர்ந்து வரும் தொழில்துறை உள்கட்டமைப்புடன், கதுவா இந்தியாவின் மருந்து ஏற்றுமதி வரைபடத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மருந்து உற்பத்தி மையமாக உருவெடுக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டம், இந்தப் பிராந்தியத்தில் மருந்துத் துறைக்கு ஒரு பெரிய திருப்புமுனை என்று அவர் விவரித்தார். இதுபோன்ற திட்டங்கள் ஜம்மு - காஷ்மீர் பகுதிகயை அறிவு சார்ந்த தொழில்கள் மூலம் தேசிய வளர்ச்சியில் ஒருங்கிணைக்கின்றன என்றும் அவர் கூறினார். பல்வேறு புதிய வாய்ப்புகளுடன் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது என மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
உயிரி தொழில்நுட்பத் துறையின் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜிதேந்திர குமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240201®=3&lang=1
***
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2240265)
வருகையாளர் எண்ணிக்கை : 9