கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாபில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

प्रविष्टि तिथि: 14 MAR 2026 9:42AM by PIB Chennai

சட்லஜ் நதி தேசிய நீர்வழித்தடம்-98 (NW-98) என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டி மாவட்டத்தில் உள்ள பாலத்திலிருந்து பஞ்சாபில் உள்ள ஹரிகே தடுப்பணை வரை செல்கிறது. அத்துடன் இது ரூப்நகர் மாவட்டம் வழியாகவும் செல்கிறது. இப்பகுதியில் சட்லஜ் நதியில் நீர்வழிப் போக்குவரத்து தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அறிக்கை மே 2026 -க்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்காக 2.82 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030-ன் நோக்கங்களின் அட்டிப்படையில் இந்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. சாத்தியக்கூறு அறிக்கையின்படி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் உள்பட பொது மக்களின் நலன்கள் அடிப்படையில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தத் தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 2240068)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2240142) आगंतुक पटल : 69
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी