அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

துல்லியமான மருத்துவம் மற்றும் உயிரித் தயாரிப்பில் இந்தியா உலகத் தலைவர்: அமைச்சர் ஜிதேந்திர சிங் உரை

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 6:21PM by PIB Chennai

மேம்பட்ட உயிரித் தொழில்நுட்பம், மரபியல் மற்றும் பல்துறை ஆராய்ச்சிகள் மூலம் இந்தியா உலகளாவிய மருத்துவ மையமாக உருவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

 

 'மல்டி-ஓமிக்ஸ்' என்ற  மாநாட்டில் உரையாற்றிய அவர், உயர்தரமான மற்றும் சிக்கனமான மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதன் மூலம், இந்தியா தற்போது மருத்துவச் சுற்றுலாவுக்கான முதன்மையான இடமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். நமது நாட்டின் நவீன உயிரித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சிகள், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு தனித்துவமான 'ஒருங்கிணைந்த மருத்துவ மாதிரியை'  உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.

 

 கடந்த பத்து ஆண்டுகளில் உயிரித் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது இந்தியாவில் 11,000-க்கும் மேற்பட்ட புத்தொழில்கள் இயங்கி வருவதாகத் தெரிவித்தார். உயிரித் தயாரிப்பு மையங்களை வலுப்படுத்த 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 'பயோபார்மா சக்தி'  திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 'மரபணு இந்தியா' (Genome India) மற்றும் விரைவில் தொடங்கப்படவுள்ள 'பீனோம் இந்தியா'  போன்ற திட்டங்கள் மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து துல்லியமான சிகிச்சை அளிக்க முடியும்.

 

 அணுசக்தித் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், ரத்தப் புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மருத்துவ ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன. இந்தியாவின் அறிவியல் திறமை மற்றும் தொலைநோக்குக் கொள்கைகள், உயிரித் தொழில்நுட்பத் துறையில் நாட்டை உலகத் தலைவராக மாற்றும் என்று அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239776&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு எண்:2239776

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2240000) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी