பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் நலனுக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 5:10PM by PIB Chennai

பயனுள்ள செயலாக்கம் மற்றும் திறமையான கண்காணிப்புக்காக, நாட்டின் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகள் உட்பட நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் நலனுக்காக மகளிர்  மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு மூன்று ஒருங்கிணைந்த திட்டங்களாக இணைக்கப்பட்டுள்ளன. (1) ஊட்டச்சத்து மற்றும் சுகாதார குறியீடுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் மிஷன் சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் ஊட்டச்சத்து  2.0 (2) மிஷன் சக்தி, பெண்களின் பாதுகாப்பு, தற்காப்பு  மற்றும் அதிகாரமளித்தல்; (3) மிஷன் வத்ஸல்யா, கடினமான சூழ்நிலைகளில் குழந்தைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் நலனுக்காக. இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மிஷன் வாத்ஸல்ய திட்டத்தின் கீழ் சுமார் 82,005 குழந்தைகள் நிறுவன பராமரிப்பில் உள்ளனர் மற்றும் 3799 குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் உள்ளன.

இது தவிர, மத்திய அரசு தேசிய வரவுசெலவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக பிரத்தியேகமாக ஒதுக்குகிறது. 2026-27 நிதியாண்டின் பாலின வரவுசெலவுத் திட்ட அறிக்கையில், ஊட்டச்சத்து, பாதுகாப்பு, அதிகாரமளித்தல் உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளின் நலனுக்காக ரூ.5.01 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026-27 நிதியாண்டில் 53 அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் பாலின வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளன.

 மத்திய மகளிர்  மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (81.73%), ஊரக வளர்ச்சித் துறை (69.92%), வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் (48.60%), குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை (48.04%), உணவு மற்றும் பொது விநியோகத் துறை (46.34%), சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை (40.44%), புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (39.05%), உயர்கல்வித் துறை (32.25%), பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் (30.93%), பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (30.22%), பள்ளிக் கல்வித் துறை (30.10%) என்ற அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்தத் தகவலை மத்திய மகளிர்  மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி

 மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239691&reg=3&lang=1

 

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239923) வருகையாளர் எண்ணிக்கை : 18
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी