மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மக்கள் மருந்தக மையங்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 4,728.42 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை

இடுகை இடப்பட்ட நாள்: 13 MAR 2026 3:50PM by PIB Chennai

நாடு முழுவதும் 18,646 மக்கள் மருந்தக மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக மத்திய ரசாயனத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.  பிரதமரின் மக்கள் மருந்தக  திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள மக்கள் மருந்தக மையங்கள் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 4728.42 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் மருந்தகங்கள் மூலம் மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மத்திய மக்கள் தொடர்பகம், பத்திரிகை தகவல் அலுவலகம், மைகவ் மற்றும் மை பாரத் செயலிகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள், வானொலி,  சமூக வலைதளங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவை தவிர, வாட்ஸ் அப், சாட்போட் போன்ற செயலிகள் வாயிலாக மக்கள் மருந்தகங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில், மக்கள் சுகாதார வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருவதன் மூலம் பொதுமக்கள் பங்கேற்கும் பேரணிகள், சுகாதார முகாம்கள், கருத்தரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

மக்களவையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய ரசாயனத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239579&reg=3&lang=1

***

AD/SV/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239795) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी