பிரதமர் அலுவலகம்
மக்களே கடவுள் என்ற உணர்வைக் கொண்ட ‘சேவா தீர்த்தம்’ கட்டடத்தைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
‘சேவா தீர்த்தம்’ கடமை, கருணை, அர்ப்பணிப்பின் அடையாளமாக நிற்கும் - பிரதமர் திரு நரேந்திர மோடி
प्रविष्टि तिथि:
13 FEB 2026 5:12PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சேவா தீர்த்தம் கட்டடத்தை தேசத்திற்கு அர்ப்பணித்தார். மக்களுக்கு சேவை செய்வதற்கான தமது அசைக்க முடியாத உறுதியை மீண்டும் அவர் எடுத்துரைத்தார். மக்களே கடவுள் என்ற புனித உணர்வே சேவா தீர்த்தத்தின் சக்தி என அவர் தெரிவித்தார்.
சேவா தீர்த்தம், பொது சேவை, மக்களின் நலன் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
‘சேவா தீர்த்தம்’ கடமை, கருணை ஆகியவற்றின் சக்திவாய்ந்த அடையாளமாக நிற்கிறது என்று பிரதமர் கூறினார்.
இது தலைமுறை தலைமுறையாக தன்னலமற்ற சேவைக்கும் அனைவரின் நலனுக்கும் அயராத அர்ப்பணிப்புடன் திகழ ஊக்குவிக்கும் என்றும், ஒவ்வொரு நபரின் நல்வாழ்வுக்காகவும் செயலாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மக்களுக்கு சேவை செய்வதற்கான அசைக்க முடியாத உறுதியுடன், மக்களே கடவுள் என்ற புனித உணர்வுடன் வழிநடத்தும் சேவா தீர்த்தம் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சேவா தீர்த்தம் எப்போதும் கடமை, கருணை, தேசமே முதன்மையானது ஆகிய கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பின் அடையாளமாக நிற்கட்டும். இது தலைமுறை தலைமுறையாக தன்னலமற்ற சேவைக்கும் அனைவரின் நலனுக்காகவும் அயராத அர்ப்பணிப்பின் பாதையில் செல்ல ஊக்குவிக்கட்டும்.”
***
(Release ID: 2227614)
AD/PLM/RK
(रिलीज़ आईडी: 2239444)
आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Marathi
,
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam