கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
டிஜிட்டல் ட்வின் (Digital Twin) தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும் நாட்டின் முதல் முக்கியத் துறைமுகமானது வ.உ.சிதம்பரனார் துறைமுகம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2026 5:40PM by PIB Chennai
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், துறைமுக மேலாண்மையில் 'டிஜிட்டல் ட்வின்' (Digital Twin) எனும் நவீனத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும் இந்தியாவின் முதல் முக்கியத் துறைமுகம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இத்திட்டத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்.
இந்தத் தொழில்நுட்பம், துறைமுகத்தின் உட்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளைத் தத்ரூபமாகப் பிரதிபலிக்கும் ஒரு மெய்நிகர் மாதிரியை உருவாக்குகிறது. இதன் மூலம் கப்பல்களின் வருகை, சரக்கு கையாளும் கருவிகளின் பயன்பாடு மற்றும் போக்குவரத்து நெரிசலை நேரலையில் கண்காணிக்க முடியும். செயற்கை நுண்ணறிவு , ட்ரோன் படமாக்கல் மற்றும் ஜி.பி.எஸ் போன்ற மேம்பட்ட வசதிகளை ஒருங்கிணைப்பதன் மூலம், துறைமுகச் செயல்பாடுகளில் 25 சதவீதம் வரை நேரத்தைச் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் 'கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030' மற்றும் 'அமிர்த கால தொலைநோக்கு 2047' ஆகியவற்றின் கீழ், இந்தியத் துறைமுகங்களைப் பன்னாட்டுத் தரத்திற்கு உயர்த்துவதில் இத்திட்டம் முக்கியப் பங்காற்றுகிறது. இதுகுறித்துத் துறைமுகத் தலைவர் திரு. சுஷாந்த குமார் புரோகித் கூறுகையில், இந்தத் தொழில்நுட்பம் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு, பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த மேலாண்மைக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2239056®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண்:2239056
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2239297)
வருகையாளர் எண்ணிக்கை : 11