மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கடல் கூண்டு வளர்ப்பு மற்றும் அலங்கார மீன் வளர்ப்பை ஊக்குவித்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
12 MAR 2026 11:30AM by PIB Chennai
மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடல்சார் நடவடிக்கைகள், அலங்கார மீன் வளர்ப்பு, முத்து வளர்ப்பு போன்ற கூடுதல் வாழ்வாதாரத்தை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அனைத்து கடலோர மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் கடல் மீன் வளர்ப்பு மேம்பாட்டிற்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை மத்திய மீன்வளத் துறை தொடங்கியுள்ளது. கடல் கூண்டு வளர்ப்பு, கடல் அலங்கார மீன்பிடித்தல், முத்து வளர்ப்பு ஆகியவை கடல் மீன் வளர்ப்பு நடவடிக்கைகளில் முக்கியமானவை.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மீன்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
(Release ID: 2238743)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2239249)
வருகையாளர் எண்ணிக்கை : 20