ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் புனரமைப்புத் திட்டம் - நாடு முழுவதும் மொத்தம் 180 ரயில் நிலையங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2026 4:40PM by PIB Chennai

அண்மை ஆண்டுகளில், இந்திய ரயில்வே தனது திட்டங்களை  செயல்படுத்தும் திறன் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக, அதன் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு 2014–15 - ம் நிதியாண்டில் ரூ 32,300 கோடியிலிருந்து 2025–26 - ம் நிதியாண்டில் ரூ 2,52,200 கோடியாக 8 மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் நீண்டகால அடிப்படையில், ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்காக அம்ரித் பாரத் ரயில் நிலையப் புனரமைப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதுவரை, அம்ரித் பாரத் ரயில் நிலையப் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், மேம்பாட்டுப் பணிகளுக்காக 1,337 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை, 180 நிலையங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238954&reg=3&lang=1

 

(Release ID: 2238954)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239227) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati , Telugu , Kannada