சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில், கல்லகம் - மீன்சுருட்டி இடையே கங்கைகொண்ட சோழபுரம் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAR 2026 4:46PM by PIB Chennai

தமிழ்நாட்டில் கல்லகத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் முதல் தேசிய நெடுஞ்சாலை 81 -ல், மீன்சுருட்டி பிரிவு வரை நடைபாதையுடன் கூடிய 7 கி.மீ நீளமுள்ள இருவழிப்பாதை பசுமை புறவழிச் சாலை அமைப்பதற்கான ஒப்புதலை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மார்ச் 11 அன்று அடிக்கல் நாட்டினார்.

பசுமைவழிச் சாலைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 3.47 கி.மீ நீளமுள்ள   அணுகுச் சாலை / சரிவான சாலைகள், 2 சிறிய பாலங்கள், 2 வாகனப் போக்குவரத்துக்கான கீழ்மட்டச் சாலைகள், 3 இலகுரக வாகனங்கள் செல்வதற்கான கடவுச் சாலைகள் மற்றும் 8 பெட்டி மதகுகள் ஆகியவை அடங்கும். இந்த திட்டம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கும் உதவிடும்.

தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை 81, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு மிக அருகில் உள்ளதால், கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு சார்ந்த அச்சம் ஏற்படுகின்றன. புறவழிச் சாலை அமைப்பதற்கான கட்டுமானம், பெருமளவிலான போக்குவரத்தை, குறிப்பாக கனரக வாகனங்களை, வேறு வழியில் திருப்பி, கோயிலுக்கு வரும் பக்தர்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும், வசதியாகவும் மாற்றுவதற்கு உதவிடும். இந்த புறவழிச் சாலை, காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கும், கோயில் கற்களில் உள்ள கல்வெட்டுகளுக்கு ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்கும், கனரக வாகனங்கள் அருகாமையில் செல்வதால் கோயிலுக்கு ஏற்படக்கூடிய சேதங்களிலிருந்து பாதுகாப்பதற்கும் உதவிடும்.

மேலும், இந்த திட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலுக்கான பயண நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238961&reg=3&lang=1

 

(Release ID: 2238961)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2239189) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English