சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய சட்டப் பணிகள் ஆணையம், மாநில, மாவட்டம், வட்டார நிலையில் சட்ட சேவைகளை செயல்படுத்துகிறது

प्रविष्टि तिथि: 12 MAR 2026 12:55PM by PIB Chennai

தேசிய சட்டப் பணிகள் ஆணையம் (NALSA), 1987-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்கு இலவச சட்ட சேவைகளை வழங்கும் பணிகளை மேற்கொள்கிறது. இது பல்வேறு நிலைகளில் அதாவது மாநில, மாவட்ட, வட்டார நிலைகளில் சட்ட சேவைகளைச் செயல்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களையும் வகுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள்/திட்டங்களின் கீழ் சட்ட உதவிகள், ஆலோசனைகள் மூலம் பயனடைந்த நபர்களின் விவரங்கள் பின்வருமாறு:-

* 2023-24-ம் ஆண்டு - 15,50,164 பேர் பயன் அடைந்தனர்.

* 2024-25-ம் ஆண்டு - 16,57,527 - பேர் பயன் அடைந்தனர்.

2025-26-ம் ஆண்டு (ஜனவரி 2026 வரை) - 16,60,249 பேர் பயன் அடைந்தனர்.

குழந்தைகள், தொழிலாளர்கள், எஸ்சி - எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் தொடர்பான பல்வேறு சட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் சட்டப் பணி அதிகாரிகளால் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சட்டப் பணி அதிகாரிகள் பல்வேறு சட்டங்கள் குறித்து, எளிய மொழியில் சிறு புத்தகங்கள், துண்டுப்பிரசுரங்களைத் தயாரித்து வழங்குகிறார்கள்.

இந்தத் தகவலை மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238788&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2238876) आगंतुक पटल : 63
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी