சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையக் கருத்தரங்கில் மனநல உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்பட்ட பராமரிப்பை விரிவுபடுத்துதல் பற்றி விவாதம்
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAR 2026 4:04PM by PIB Chennai
பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் இந்தியாவில் மனநல உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் மேம்பட்ட நரம்பியல்-மனநல சிகிச்சையை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதைய மனநல நிறுவனங்களின் மேம்பாடு, வட இந்தியாவில் குறைவாக உள்ள மூன்றாம் நிலை மனநல வசதிகளை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கியமான தலைப்புகள் ஆகும். கருத்தரங்கில் இந்தியர்களில் ஏழில் ஒருவருக்கு மனநல குறைபாடு இருப்பது, பல மாநிலங்களில் சிகிச்சை கிடைப்பதில் 70–90 சதவீத இடைவெளி இருப்பது, மற்றும் மனநல மற்றும் நரம்பியல் நோய்கள் நாட்டில் மரணங்களின் 60 சதவீதத்திற்கு காரணமாக இருப்பது போன்ற உண்மைகள் பகிரப்பட்டது.
மனநல சேவைகளை தொலைதூர பகுதிகளிலும் மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதற்காக மாதிரிகள் பரிந்துரைக்கப்பட்டன. டிஜிட்டல் சுகாதார வழிமுறைகள் மூலம் நோயாளிகளின் தொடர்ந்த கவனம், தேசிய மனநல பதிவேடுகள் மற்றும் ஆராய்ச்சி வலையமைப்புகள் உருவாக்கல், முக்கிய நிறுவனங்களை பிராந்திய உச்ச மனநல மையங்களாக மேம்படுத்தல் ஆகிய செயல்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
இந்தத் திட்டத்தின் நோக்கம் இந்தியாவின் மூன்று முக்கிய மனநல நிறுவனங்களை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் சேவை மையமாக உருவாக்குவது மற்றும் நாட்டின் எல்லா பகுதிகளிலும் தரமான, அணுகக்கூடிய மற்றும் தொழில்நுட்ப ஆதரவு கொண்ட மனநல சேவைகளை வழங்குவதை உறுதி செய்தல் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236971®=3&lang=1
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2237262)
வருகையாளர் எண்ணிக்கை : 9