சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது – மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

प्रविष्टि तिथि: 09 MAR 2026 5:07PM by PIB Chennai

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. எனினும் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு முறையை பலப்படுத்த பிரத்யேக சுற்றுலா காவல் படையை அமைப்பது குறித்து, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுடன் மத்திய சுற்றுலா அமைச்சகம் தொடர்புகொண்டு வருகிறது. இம்முயற்சியின் விளைவாக தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், தில்லி, கோவா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுற்றுலாக் காவல் படை அமைக்கப்பட்டுள்ளது.

நிர்பயா நிதியின் கீழ் மகளிருக்குப் பாதுகாப்பான சுற்றுலாத் தலங்களின் பயன்கள் கிடைப்பது குறித்த அறிக்கையை, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களிடம் காலமுறை அடிப்படையில் சுற்றுலா அமைச்சகம் கேட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக, 10 சர்வதேச மொழிகள் உட்பட 12 மொழிகளில் தகவல்கள் வழங்கப்படுகிறது. மேலும் 1800111363 என்ற 24 மணி நேர கட்டணமில்லா  தெலைபேசி எண்ணினை சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.

இத்தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2237043&reg=3&lang=1

***

AD/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2237172) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी