சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு மையங்களை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAR 2026 2:53PM by PIB Chennai
“அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் – மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவு மையங்களை வலுப்படுத்துவது என்ற பட்ஜெட் அறிவிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
2026 – 27 மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் அவசரகால சுகாதாரப் பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துவதற்கான பெரும் முன்முயற்சியை அரசு அறிவித்தது.
அவசரகால சிகிச்சைகள், குடும்பங்களுக்கு குறிப்பாக ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு, எதிர்பாராத சுகாதார செலவினத்தை ஏற்படுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு அவசரகால மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு மையங்களை அமைப்பதன் மூலம், மாவட்ட மருத்துவமனைகளில் அந்தப் பிரிவுகளை 50 சதவீதம் அளவிற்கு அதிகரிக்க அரசு பரிந்துரைத்துள்ளது.
இந்த அமர்வு, கொள்கை வகுப்பாளர்கள், பொது சுகாதார நிபுணர்கள், மாநில அரசுகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்தது. சாலை விபத்து, மாரடைப்பு, பக்கவாதம், தீக்காயம், பாம்புக்கடி உட்பட அவசரகால மருத்துவ சூழல்களை இந்தியா பெருமளவு எதிர்கொள்கிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும், நீண்டகால இயலாமையையும் தடுக்கவும் உரிய தருணத்தில் உரிய சிகிச்சை தேவைப்படுகிறது.
இதற்காகப் பல மாவட்ட மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் இருப்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டினார்கள். இதையடுத்து அவசரகாலப் பிரிவு உட்கட்டமைப்பு மற்றும் அதன் முறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள் எடுத்துரைத்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236917®=3&lang=1
***
AD/IR/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2237138)
வருகையாளர் எண்ணிக்கை : 8